சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர் வழங்கல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி வழிபாட்டுக்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. பல்வேறு வழிபாடுகளுக்கு பிறகு நேற்று இரவு கோயில் நடை சாத்தப்பட்டது.

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி வழிபாட்டுக்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. பல்வேறு வழிபாடுகளுக்கு பிறகு நேற்று இரவு கோயில் நடை சாத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடை தொடங்கும் காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பூஜை நேற்று நடைபெற்றது. இதற்காக, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் நேற்று முன்தினம் நெற்கதிர்கள் கொண்டுவரப்பட்டன. பம்பை கணபதி கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு 18-ம் படி வழியே ஐயப்பன் சந்நிதிக்கு தலைச்சுமையாகக் கொண்டு வரப்பட்டன.
What's Your Reaction?