சதாம் உசேனுக்கு நேர்ந்ததுதான் ஈரானின் கமேனிக்கும் நடக்கும்: இஸ்ரேல் எச்சரிக்கை

ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேனுக்கு நேர்ந்தது போலவே ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கும் நடக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

Jun 17, 2025 - 19:20
 0  4
சதாம் உசேனுக்கு நேர்ந்ததுதான் ஈரானின் கமேனிக்கும் நடக்கும்: இஸ்ரேல் எச்சரிக்கை

டெல் அவிவ்: ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேனுக்கு நேர்ந்தது போலவே ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கும் நடக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஈரான் உடனான போர் வலுத்துள்ள நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறும்போது, "போர்க் குற்றங்களைச் செய்வதற்காகவும், இஸ்ரேலிய பொதுமக்கள் மீது ஏவுகணைகளை ஏவுவதற்காகவும் ஈரானிய சர்வாதிகாரியை நான் எச்சரிக்கிறேன். இஸ்ரேலுக்கு எதிராக இதே பாதையை எடுத்த ஈரானுக்கு அண்டை நாட்டில் இருந்த சர்வாதிகாரிக்கு என்ன நடந்தது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow