தமிழகத்தில் பால் கையாளும் திறனை தினமும் 70 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்
தமிழகத்தில் பால் கையாளும் திறனை நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டரிலிருந்து, 70 லட்சம் லிட்டராக உயர்த்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சேலம்: தமிழகத்தில் பால் கையாளும் திறனை நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டரிலிருந்து, 70 லட்சம் லிட்டராக உயர்த்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சேலம் ஆவின் பால் பண்ணையில் ரூ.51.62 கோடி செலவில் அமைக்கப்பட்ட நாளொன்றுக்கு 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன தானியங்கி பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை, தமிழக முதல்வர் கடந்த 12-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ஆலையைப் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று பார்வையிட்டு, ஆலையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
What's Your Reaction?