அமெரிக்கா சிவப்புக் கோட்டை தாண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்: ஈரான் எச்சரிக்கை

“ஈரானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது. அமெரிக்கா ‘சிவப்பு கோட்டை’ தாண்டினால் ஈரான் தக்க பதிலடி கொடுக்கும்” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் எச்சரித்துள்ளார்.

Jun 18, 2025 - 19:50
 0  4
அமெரிக்கா சிவப்புக் கோட்டை தாண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்: ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான்: “ஈரானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது. அமெரிக்கா ‘சிவப்பு கோட்டை’ தாண்டினால் ஈரான் தக்க பதிலடி கொடுக்கும்” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய தூதர் அலி பஹ்ரைனி, "இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எந்த நேரத்திலும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்தால், நாங்கள் அமெரிக்காவுக்கு பதிலளிக்கத் தொடங்குவோம். ட்ரம்ப்பின் முற்றிலும் தேவையற்ற மற்றும் விரோதமான கருத்துகள் குறித்து ஈரான் விழிப்புடன் இருக்கிறது. ஒரு கோடு உள்ளது, அதை தாண்டினால், எங்கள் தரப்பில் பதிலளிப்போம். அமெரிக்கா சிவப்புக் கோட்டை தாண்டியவுடன், எங்களின் பதில் வரும்" என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow