“ஈரான் ஒருபோதும் சரணடையாது” - ட்ரம்ப்புக்கு அயதுல்லா அலி கமேனி பதிலடி

ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும், எந்தவொரு அமெரிக்க ராணுவத் தலையீடும் ஈடுசெய்ய முடியாத சேதத்துடன் இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பதிலடி கொடுத்துள்ளார்.

Jun 18, 2025 - 18:05
 0  4
“ஈரான் ஒருபோதும் சரணடையாது” - ட்ரம்ப்புக்கு அயதுல்லா அலி கமேனி பதிலடி

தெஹ்ரான்: ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும், எந்தவொரு அமெரிக்க ராணுவத் தலையீடும் ஈடுசெய்ய முடியாத சேதத்துடன் இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பதிலடி கொடுத்துள்ளார்.

தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தொலைக்காட்சி உரையில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறும்போது, "ஈரான் ஒருபோதும் சரணடையாது. ஈரான் திணிக்கப்பட்ட போருக்கு எதிராக உறுதியாக நிற்கும். அதேபோல் திணிக்கப்பட்ட அமைதிக்கு எதிராகவும் உறுதியாக நிற்கும். திணிக்கப்பட்டால் இந்த நாடு யாருக்கும் சரணடையாது. ஈரானையும் அதன் வரலாற்றையும் அறிந்தவர்கள், ஈரானியர்கள் அச்சுறுத்தலின் மொழிக்கு சரியாக பதிலளிக்க மாட்டார்கள் என்பதை அறிவார்கள். எந்தவொரு அமெரிக்க ராணுவத் தலையீடும் சந்தேகத்துக்கு இடமின்றி சரிசெய்ய முடியாத விளைவுகளுடன் இருக்கும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow