இஸ்ரேலின் டெல் அவிவில் ‘மொசாட்’ மையத்தை தாக்கியதாக ஈரான் தகவல்

டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட்டின் மையத்தைத் தாக்கியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Jun 17, 2025 - 19:20
 0  5
இஸ்ரேலின் டெல் அவிவில் ‘மொசாட்’ மையத்தை தாக்கியதாக ஈரான் தகவல்

தெஹ்ரான்: டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட் (Mossad) மையத்தைத் தாக்கியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஈரான் இடையே 5-வது நாளாக அதிகரித்து வரும் வான்வழிப் போருக்கு மத்தியில், இன்று டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பான மொசாட்டின் மையத்தைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதுகுறித்த அறிக்கையில், "இஸ்ரேலின் சியோனிச ஆட்சி ராணுவத்தின் ராணுவ புலனாய்வு மையமான அமானையும், டெல் அவிவில் உள்ள சியோனிச ஆட்சியின் பயங்கரவாத நடவடிக்கை திட்டமிடல் மையமான மொசாட்டையும் தாக்கினோம். அது தற்போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது" என்று கூறியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow