ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல்: இருவர் பலி, 68 பேர் காயம் - சவுதியைச் சேர்ந்தவர் கைது

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் காரை தாறுமாறாக ஓட்டி நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் பலியாகினர். 68 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சவுதியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Dec 21, 2024 - 09:50
 0  2
ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல்: இருவர் பலி, 68 பேர் காயம் - சவுதியைச் சேர்ந்தவர் கைது

பெர்லின்: ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் காரை தாறுமாறாக ஓட்டி நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் பலியாகினர். 68 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சவுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் இத்தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரு குழந்தை உள்பட இருவர் மட்டுமே உயிரிழந்ததாக அரசு தரப்பு உறுதி செய்துள்ளது.

இது குறித்து ஜெர்மன் போலீஸார் கூறுகையில், மேக்டேபர்க் நகரில் வெள்ளிக்கிழமை மாலை கிறிஸ்துமஸ் சந்தைக்குள் கார் ஒன்று தாறுமாறாக ஓடியதில் 2 பேர் கொல்லப்பட்டர். 60 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தான் அந்தக் காரை ஓட்டிவந்தார். அவர் ஓட்டிவந்த பிஎம்டபிள்யு காரை வாடகைக்கு எடுத்துள்ளார். அவர் மட்டுமே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது உறுதியானதால் இனி வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அந்த நபர் கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மனியில் நிரந்தரக் குடியுரிமை பெற்று வசித்துவந்தார். ” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow