கேரள பள்ளிகளில் ‘பெஞ்ச்’ புரட்சி - ‘ட்ரெண்ட்’ வகுப்பறைக்கு வித்திட்ட திரைப்படம்!

முதல் வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பாளிகளாகிறார்களா? அல்லது கடைசி வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறார்களா? என்பது, ‘கொடியசைந்ததும் காற்றுவந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா?” போன்றதொரு விடுகதை போல் நீடிக்கிறது.

Jul 12, 2025 - 14:15
 0  4
கேரள பள்ளிகளில் ‘பெஞ்ச்’ புரட்சி - ‘ட்ரெண்ட்’ வகுப்பறைக்கு வித்திட்ட திரைப்படம்!

‘ஒரு திரைப்படம் என்ன செய்யும்... பொழுதுபோக்க வைப்பதைத் தாண்டி’ என்று கேட்போர் அதிகம். ஆனால், அவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை, பல நேரங்களில் அது சொல்லாமல் பல மாற்றங்களைச் செய்து செல்லும் என்பதை. சில நேரங்களில் அவர்களைப் போன்றோர் அறிந்து கொள்ளவே பட்டவர்த்தமான மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தும். அப்படியான ஒரு மாற்றம்தான், குழந்தைகளுக்கான ஒரு திரைப்படத்தால் கேரள பள்ளிகளில் தொடங்கி பஞ்சாப் பள்ளி வரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டு மூன்று வரிசைகளாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த இருக்கை வரிசைகளில் முதல் வரிசையில் அமரும் மாணவர்களை படிப்பாளி என்றும், கடைசி வரிசைகளில் அமரும் மாணவர்களை சேட்டைக்காரர்கள், மாணவிகளாக இருந்தால் திருமணம் வரை பள்ளி, கல்லூரிக்கு வந்து செல்லும் ‘மாப்பிள்ளை பெஞ்ச்காரிகள்’ என்றும் விமர்சிக்கப்பட்டே, அது பொதுபுத்தியில் உண்மை எனப் பதிந்துவிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow