பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 400 கிலோ ‘மெகா சைஸ்’ கொப்பரை குலா மீன்!
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் வலையில் 400 கிலோ எடை கொண்ட 'மெகா சைஸ்' கொப்பரை குலா சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் வலையில் 400 கிலோ எடை கொண்ட 'மெகா சைஸ்' கொப்பரை குலா சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 50-க்கும் அதிகமான நாட்டுப் படகுகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். மீனவர்கள் மீன் பிடித்துவிட்டு இன்று (டிச.21) பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பினர். மீனவர்கள் வலையில் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்கள், அதே போல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவு கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர்.
What's Your Reaction?