காவல் ஆய்வாளர் முயற்சியால் கடையநல்லூரில் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்!
சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருந்த கடையநல்லூர் அங்கன்வாடி மைய கட்டிடம் காவல் ஆய்வாளரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது. கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

தென்காசி: சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருந்த கடையநல்லூர் அங்கன்வாடி மைய கட்டிடம் காவல் ஆய்வாளரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது. கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அங்கன்வாடி மையத்தின் அருகில் சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தன.
What's Your Reaction?