8 ஆண்டுகளில் 40,000 மரங்கள்: தரிசு நிலத்தை பசுமைக் காடாக மாற்றியவரின் உத்வேகக் கதை!
மத்தியப் பிரதேசத்தில் தரிசு நிலமாக இருந்த இடத்தில், 8 ஆண்டுகளில் 40,000 மரங்களை வளர்த்து சாதனை படைத்த ஓர் இயற்கை ஆர்வலரின் உத்வேக கதையைப் பற்றி பார்ப்போம். இவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் தரிசு நிலமாக இருந்த இடத்தில், 8 ஆண்டுகளில் 40,000 மரங்களை வளர்த்து சாதனை படைத்த ஓர் இயற்கை ஆர்வலரின் உத்வேக கதையைப் பற்றி பார்ப்போம். இவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேசம், இந்தூரில் அமைந்துள்ளது கேஷர் பர்வத் (மலைப்பகுதி). இது இயற்கையை விரும்புவோருக்கு ஒரு கனவு இடமாக மாறியுள்ளது. இப்பகுதியில், காஷ்மீரில் அதிகமாக காணப்படும் குங்குமப்பூ, வில்லோ மரங்கள், தாய்லாந்தின் டிராகன் பழங்கள், ஆஸ்திரேலியாவின் அவகோடா பழங்கள், இத்தாலியின் ஆலிவ் மற்றும் மெக்சிகோவின் பேரீச்சம்பழங்கள் என அனைத்தும் கிடைக்கும்.
What's Your Reaction?