‘காதல் உறவால் உங்கள் பிள்ளைகள் உணர்வுகளோடு விளையாடாதீர்!’ - எச்சரிக்கும் உளவியல் நிபுணர்கள்
தந்தைக்கோ, தாய்க்கோ வீட்டைத் தாண்டி வேறொரு காதலுறவு இருந்தால் அது ஒரு குழந்தையின் மனநிலையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற பார்வை சார்ந்தது இக்கட்டுரை.

தந்தைக்கோ, தாய்க்கோ வீட்டைத் தாண்டி வேறொரு காதலுறவு இருந்தால் அது ஒரு குழந்தையின் மனநிலையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற பார்வை சார்ந்தது இக்கட்டுரை. மனிதர்கள் பிரச்சினைகளை அணுகுவதிலும், அதிலிருந்து விடுவித்துக் கொள்வதிலும் வேறுபட்டவர்கள் என்பதால் இந்தப் பிரச்சினையில் இப்படியான எதிர்வினைகள்தான் இருக்கும், இருக்காது என்றெல்லாம் பொதுமைப்படுத்தாமல் அணுக முயற்சிக்கிறேன்.
திருமணமானவர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் வேறொரு காதலுறவு என்பது சட்டபூர்வமானது அல்ல என்று தெரிந்தே தான் அத்தகைய உறவை அதில் ஈடுபடுபவர்கள் முன்னெடுக்கின்றனர். அதனாலேயே அதைப் பற்றி யாரிடமும், ஏன் நெருங்கிய நட்பு வட்டத்தில் கூட சொல்லிக் கொள்வதில்லை. ஒருவேளை அது கணவனுக்கோ / மனைவிக்கோ அல்லது குழந்தைகளுக்கோ தெரியவரும்போது குடும்பத்தில் ஓர் உணர்வுப் பிரளயத்தையே ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள் இந்த சச்சரவைப் புரிந்து கொள்வதில் பெரும் போராட்டத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.
What's Your Reaction?