வத்தலகுண்டு அருகே வாழைப் பழங்களை சூறைவிடும் பாரம்பரிய திருவிழா!
வத்தலகுண்டு அருகே சேவும்கம்பட்டி கிராமத்தில் வாழைப் பழங்களை சூறைவிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா இன்று (ஜன.16) நடைபெற்றது.

வத்தலகுண்டு: வத்தலகுண்டு அருகே சேவும்கம்பட்டி கிராமத்தில் வாழைப் பழங்களை சூறைவிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா இன்று (ஜன.16) நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சேவுகம்பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான சோலைமலை அழகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் 3-ம் தேதியன்று திருவிழா நடைபெறுகிறது. பொங்கல் விழா முடிந்ததும் நடைபெறும் இந்த திருவிழாவில் சேவுகம்பட்டியை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி வேலைநிமித்தமாக வெளியூர்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவரும் வந்து இந்த திருவிழாவில் பங்கேற்கின்றனர்.
What's Your Reaction?