லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ - காற்று வலுவிழந்ததால் தீயணைப்பு பணிகளில் முன்னேற்றம்!

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை அச்சுறுத்தி வரும் இரண்டு காட்டுத் தீயை தீவிரமாக்கி வந்த பலத்த காற்று தற்போது பலவீனமடைந்து உள்ளதால், தீயணைப்பு வீரர்களின் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அவர்களின் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Jan 16, 2025 - 21:10
 0  12
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ - காற்று வலுவிழந்ததால் தீயணைப்பு பணிகளில் முன்னேற்றம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை அச்சுறுத்தி வரும் இரண்டு காட்டுத் தீயை தீவிரமாக்கி வந்த பலத்த காற்று தற்போது பலவீனமடைந்து உள்ளதால், தீயணைப்பு வீரர்களின் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அவர்களின் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் ஒன்பது நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இரு பெரும் காட்டுத் தீ இதுவரை மொத்தம் 40,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பை எரித்து நாசமாக்கியுள்ளது. 12,000-க்கும் அதிகமான கட்டமைப்புகள் தீயால் அழிக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow