நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க ‘சிவகாசி பட்டாசு’க்கு கிட்டுமா புவிசார் குறியீடு?
நூற்றாண்டு பாரம்பரியமிக்க சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேடு அலுவலகத்தில் டான்பாமா பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி: நூற்றாண்டு பாரம்பரியமிக்க சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேடு அலுவலகத்தில் டான்பாமா பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு என்றாலே அனைவரது நினைவுக்குக் வருவது சிவகாசிதான். 1920-களில் சிவகாசி பகுதிகளில் நிலவிய வறட்சி காரணமாக மாற்று தொழிலை உருவாக்குவதற்காக சிவகாசியை சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் இருவரும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்று தீப்பெட்டி தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு, 1923-ம் ஆண்டு சிவகாசியில் தீப்பெட்டி தொழிலை தொடங்கினர். தீப்பெட்டி தொழிலின் நீட்சியாக பட்டாசு தொழில் தொடங்கப்பட்டது. மத்தாப்பூ, ஓலை வெடி, சிட்டு புட்டு ரக பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட தற்போது சிவகாசியில் 300-க்கும் மேற்பட்ட வகைகளில் பட்டாசுகள் உற்பத்தி செய்யபடுகிறது.
What's Your Reaction?