விழாக்கோலம் பூண்டுள்ள திருப்பரங்குன்றம் - 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்!

முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் ஜூலை 14-ம் தேதி அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

Jul 12, 2025 - 14:40
 0  4
விழாக்கோலம் பூண்டுள்ள திருப்பரங்குன்றம் - 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்!

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயி்லில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 14-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. தற்போது யாகசாலை பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் அலை அலையாக வரும் மக்களின் வருகையால் திருப்பரங்குன்றம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14-ம் தேதி அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. முன்னதாக ரூ.2.44 கோடியில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக உபயதாரர் மூலம் ரூ.70 லட்சத்தில் 125 அடி உயரமுள்ள ஏழு நிலை ராஜகோபுரத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow