365-வது ஆண்டாக காவடிகளுடன் பழநி வந்தடைந்த எடப்பாடி பக்தர்கள்: மலைக்கோயிலில் தங்கி வழிபாடு

தைப்பூசத் திருவிழாவையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் காவடிகளுடன் பழநிக்கு வந்து சேர்ந்தனர். இன்று (பிப்.19) இரவு முழுவதும் மலைக்கோயிலில்  தங்கியிருந்து வழிபாடு நடத்த உள்ளனர்.

Feb 19, 2025 - 15:40
 0  4
365-வது ஆண்டாக காவடிகளுடன் பழநி வந்தடைந்த எடப்பாடி பக்தர்கள்: மலைக்கோயிலில் தங்கி வழிபாடு

சேலம்: தைப்பூசத் திருவிழாவையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் காவடிகளுடன் பழநிக்கு வந்து சேர்ந்தனர். இன்று (பிப்.19) இரவு முழுவதும் மலைக்கோயிலில் தங்கியிருந்து வழிபாடு நடத்த உள்ளனர்.

பழநியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி 365-வது ஆண்டாக சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து காவடி சுமந்தபடி பாதயாத்திரையாக புறப்பட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதல் ஒவ்வொரு குழுவாக பழநிக்கு வந்தனர். இன்று புதன்கிழமை காலை பழநி சண்முகநதியில் புனித நீராடிய பக்தர்கள், பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின் மலைக்கோயிலுக்கு பால் குடம், மயில் மற்றும் இளநீர் காவடிகளுடன் ஊர்வலமாக சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow