கிதாரும் பேனாவும் | தேன் மிட்டாய் 46

பேனாவும் கையுமாக இருக்கும் கசுவோ இஷிகுரோவைத்தான் உங்களுக்குத் தெரியும். ஒரு காலத்தில் நான் கிதாரும் கையுமாகவே எல்லா இடங்களிலும் சுற்றி அலைந்துகொண்டிருந்தேன்.

Apr 16, 2025 - 14:15
 0  4
கிதாரும் பேனாவும் | தேன் மிட்டாய் 46

பேனாவும் கையுமாக இருக்கும் கசுவோ இஷிகுரோவைத்தான் உங்களுக்குத் தெரியும். ஒரு காலத்தில் நான் கிதாரும் கையுமாகவே எல்லா இடங்களிலும் சுற்றி அலைந்துகொண்டிருந்தேன். ஒரு பாடல். நானே எழுதியது. நானே இசை அமைத்தது. இரண்டு நிமிடங்கள் கேட்டுப் பார்க்கிறீர்களா? சரி என்று யாராவது சொன்னால் உற்சாகமாகத் தோளில் இருந்து கைக்கு மாற்றி, வாசிக்க ஆரம்பித்துவிடுவேன். ‘ம், நன்றாக இருக்கிறது’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தால் போதும். கால் தரையில் நிற்காது. ஆகா, அமெரிக்கா என்னை ஏற்றுக்கொண்டுவிட்டது. என் பாடல் வெற்றி பெற்றுவிட்டது. இனி எல்லா மேடைகளிலும் என் இசை ஒலிக்கும்.

என் பாடலைப் பதிவு செய்து மிகுந்த நம்பிக்கையோடு எல்லாப் பெரிய நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்தேன். ஒன்றில்லாவிட்டால் இன்னொன்றில் கிடைக்காமலா போய்விடும்? இன்று வராவிட்டால் என்ன, நாளை அழைப்பு வந்து சேராதா? யாருக்குதான் பிடிக்காமல் போகும் என் பாடல்? யாருக்குதான் அலுக்கும் என் இசை? கிதாரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு இரவு பகலாகக் கனவில் மிதந்துகொண்டிருந்தேன். ஒரே நேரத்தில் எல்லாரும் அழைத்துவிட்டால் எல்லாருக்கும் புதிதாக அளிக்க வேண்டுமே என்று பதறி, புதிய, புதிய பாடல்களாக எழுதிக் குவித்தேன். புதிது, புதிதாக இசைத்து, சேகரித்து வைத்துக்கொண்டேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow