செலவு குறித்த கவலை தேவையில்லை! | மனதின் ஓசை 17

மனநலப் பாதிப்புக்கான சிகிச்சையின்போது பல மாதங்கள் தொடர்ந்து மருத்துவரைச் சந்திக்க வேண்டும், மருந்து மாத்திரைகள் உள்கொள்ள வேண்டும். முழுமையாகக் குண மடைய தொடர் சிகிச்சை அவசியம்.

Apr 16, 2025 - 13:40
 0  6
செலவு குறித்த கவலை தேவையில்லை! | மனதின் ஓசை 17

மனநலப் பாதிப்புக்கான சிகிச்சையின்போது பல மாதங்கள் தொடர்ந்து மருத்துவரைச் சந்திக்க வேண்டும், மருந்து மாத்திரைகள் உள்கொள்ள வேண்டும். முழுமையாகக் குண மடைய தொடர் சிகிச்சை அவசியம். இதற்காக அதிகப் பணம் செல வழிக்க வேண்டும் என்பதே பெரும் பாலானோரின் தவறான புரிதலாக உள்ளது. இது உண்மை நிலவரம் அல்ல.

அரசு மருத்துவமனைகளில் மனநலச் சேவை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார நிலையங்களில் மாவட்ட மனநலத் திட்டத்தின் மூலமாக ‘Advance Tour Program’ வழியாக மாதந்தோறும் குறிப்பிட்ட சில நாள்களில் மனநல மருத்துவச் சேவை வழங்கப்படுகிறது. இதில் மனநல மருத்துவர் தலைமையிலான உளவியலாளர், சமூகப் பணியாளர், செவிலியர் ஆகியோர் அடங்கிய குழு மனநல மருத்துவச் சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டில் சுமார் 600க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ மையங்களில் இச்சேவை வழங்கப் படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow