கண்ணனுக்கு பல்லாண்டு பாடுவோம்..! | மார்கழி மகா உற்சவம் 24
அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொள்ள நீ உடனே எழுந்தருள வேண்டும் என்று ஈசனை வேண்டுகிறார் மாணிக்கவாசகர். கல்வியில் விழிப்புடன் இருப்பவர்கள், உலகில் சிறப்பிடம் பெறுவர்.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி |
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, ||
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி |
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, ||
குன்று குடையாய் எடுத்தாய்! குணம்போற்றி! |
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, ||
என்றேன்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் |
இன்று யாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 24)
What's Your Reaction?