ஓனி என்கிற பயணி! | வரலாறு முக்கியம் மக்களே! - 08
நியூயார்க் மாகாணத்தில் அல்பெனி நகரத்தில் வசித்த ஓர் அஞ்சல் ஊழியரின் வளர்ப்பு நாய் அது. 1887ஆம் ஆண்டு பிறந்த அதற்கு வைக்கப்பட்ட பெயர் ஓனி (Owney).

நியூயார்க் மாகாணத்தில் அல்பெனி நகரத்தில் வசித்த ஓர் அஞ்சல் ஊழியரின் வளர்ப்பு நாய் அது. 1887ஆம் ஆண்டு பிறந்த அதற்கு வைக்கப்பட்ட பெயர் ஓனி (Owney). தன் எஜமானர் அவ்வப்போது வீட்டுக்கு எடுத்துவரும் அஞ்சல் மூட்டைகளின் வாசம் ஓனிக்குப் பிடித்திருந்தது. அந்த அஞ்சல் மூட்டைகளின் மீது சொகுசாகப் படுத்து உறங்குவது அதன் வழக்கமாகிப் போனது.
ஒருநாள் அஞ்சல் மூட்டைகளை எடுத்துக் கொண்டு அலுவலகத்துக்குப் புறப்பட்டார் எஜமானர். ஓனியும் அவர் பின்னாலேயே ஓடியது. அங்கே ஏகப்பட்ட அஞ்சல் மூட்டைகள் இருப்பதைக் கண்டு குஷியானது. அதனால், எஜமானரோடு அடிக்கடி ஓனியும் அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லத் தொடங்கியது. அங்குள்ளவர்களுடன் பழகி அவர்களின் செல்லமானது.
What's Your Reaction?