ஏர் இந்​தி​யா, ஏஐ எக்​ஸ்​பிரஸ் இழப்பு ரூ.9,568 கோடி

கடந்த மார்ச் மாதத்​துடன் முடிவடைந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் ஏர் இந்​தியா மற்​றும் ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் ஆகியவை இணைந்து வரிக்கு முன் ரூ.9,568.4 கோடி இழப்பை கண்​டுள்​ளன.

Aug 22, 2025 - 08:45
 0  3
ஏர் இந்​தி​யா, ஏஐ எக்​ஸ்​பிரஸ் இழப்பு ரூ.9,568 கோடி

புதுடெல்லி: சிவில் விமானப் போக்​கு​வரத்து இணை​யமைச்​சர் முரளிதர் மோஹோல் மக்​களவை​யில் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதில்: கடந்த மார்ச் மாதத்​துடன் முடிவடைந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் ஏர் இந்​தியா மற்​றும் ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் ஆகியவை இணைந்து வரிக்கு முன் ரூ.9,568.4 கோடி இழப்பை கண்​டுள்​ளன.

ஆகாசா ஏர் மற்​றும் ஸ்பைஸ்​ஜெட் ஆகியவை வரிக்கு முன், முறையே ரூ.1,983.4 கோடி மற்​றும் ரூ.58.1 கோடி இழப்பை சந்​தித்​துள்​ளன. அதேசம​யம், இண்​டிகோ நிறு​வனம் வரிக்கு முந்​தைய லாப​மாக ரூ.7,587.5 கோடியை ஈட்​டி​யுள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow