அஞ்சலக ஏற்றுமதி மையம் மூலம் வெளிநாடுகளுக்கு குறைந்தக் கட்டணத்தில் பார்சல் அனுப்பும் வசதி!

‘‘அஞ்சலக ஏற்றுமதி மையம் மூலமாக வெளிநாடுகளுக்கு பார்சல்களை குறைந்தக் கட்டணத்தில் ஏற்றுமதியாளர்கள் அனுப்பலாம். இந்த வாய்ப்பை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், மகளிர் தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் தெரிவித்துள்ளார்

Feb 10, 2025 - 08:55
 0  4
அஞ்சலக ஏற்றுமதி மையம் மூலம் வெளிநாடுகளுக்கு குறைந்தக் கட்டணத்தில் பார்சல் அனுப்பும் வசதி!

‘‘ அஞ்சலக ஏற்றுமதி மையம் மூலமாக வெளிநாடுகளுக்கு பார்சல்களை குறைந்தக் கட்டணத்தில் ஏற்றுமதியாளர்கள் அனுப்பலாம். இந்த வாய்ப்பை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், மகளிர் தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், கிண்டியில் உள்ள எம்எஸ்எம்இ வளாகத்தில் அஞ்சலக ஏற்றுமதி மைய கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. இக்கண்காட்சியை தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘தமிழகத்தில் 66 அஞ்சலக ஏற்றுமதி மையங்கள் செயல்படுகின்றன. 540-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்சல்களை அனுப்பி உள்ளனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், மகளிர் தொழில் முனைவோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow