புதிய உச்சம் தொட்ட யுபிஐ: அக்டோபரில் ரூ.23 லட்சம் கோடி பரிவர்த்தனை
யுபிஐ மூலம் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.23.5 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். மொத்தமாக கடந்த மாதம் 1,658 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை: யுபிஐ மூலம் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.23.5 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். மொத்தமாக கடந்த மாதம் 1,658 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த மாதம் 1,658 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.23.5 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பரிவர்த்தனை எண்ணிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்தைவிட இது 10 சதவீதமும், பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் 14 சதவீதமும் அதிகம் ஆகும்.
What's Your Reaction?