ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கு உகந்தது கோவை... ஏன்?
தமிழகத்தில் சென்னையில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி அபரிமிதமானது. சென்னை நகர் மட்டுமல்லாமல், சென்னைப் பகுதிகளை உள்ளடக்கிய காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளும் பெரிய அளவில் வளர்ந்திருக்கின்றன.

தமிழகத்தில் சென்னையில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி அபரிமிதமானது. சென்னை நகர் மட்டுமல்லாமல், சென்னைப் பகுதிகளை உள்ளடக்கிய காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளும் பெரிய அளவில் வளர்ந்திருக்கின்றன. இந்தப் பகுதிகளில்தான் ரியல் எஸ்டேட் முதலீடுகள் அதிகளவில் குவிகின்றன. இந்தப் பகுதிகளைத் தாண்டி தமிழகத்தில் ரியல் எஸ்டேட் முதலீடுக்கு ஏற்ற பகுதிகளே இல்லையா என்றால் ஏன் இல்லை? இருக்கவே இருக்கிறது என்று கோவையைக் கைகாட்டுகிறார்கள் ரியல் எஸ்டேட் முதலீட்டு ஆலோசகர்கள்.
பெரு நகரங்களைத் தாண்டி தேசிய அளவில் அகமதாபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், கொச்சி, கோவை உள்ளிட்ட நகரங்கள் பெரிய அளவில் வளர்ச்சியைக் கண்டுவருகின்றன. அதற்கேற்ப இந்த நகரங்களில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) சார்ந்த வேலைவாய்ப்புகளும் முன்பைவிட அதிகரித்திருக்கின்றன. ஐ.டி. வளர்ச்சிக்கு பிறகே சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் ரியல் எஸ்டேட்டும் பெரிய அளவில் வளர்ச்சியைக் கண்டன.
What's Your Reaction?