ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.91,000-ஐ கடந்தது!
தங்கம் விலை இன்று (அக்.8) இன்று இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 1480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.91,080 க்கு விற்பனையாகிறது.

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.91,080 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு பவுன் ரூ.1480 விலை உயர்ந்து அதிர்ச்சியைக் கடத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம் செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது.
What's Your Reaction?