எச்1பி விசா கட்டண உயர்வு... அமெரிக்காவுக்கு பின்னடைவு, இந்தியாவுக்கு ஆதாயமா?
எச்1பி விசா கட்டண உயர்வு என்ற ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை மூலம் அமெரிக்காவுக்கு பல விதங்களில் பின்னடைவும், இந்தியாவுக்கு பல வழிகளில் நன்மைகளும் ஏற்படும் என்று வர்த்தக மற்றும் தொழில்நுட்ப துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எச்1பி விசா கட்டண உயர்வு என்ற ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை மூலம் அமெரிக்காவுக்கு பல விதங்களில் பின்னடைவும், இந்தியாவுக்கு பல வழிகளில் நன்மைகளும் ஏற்படும் என்று வர்த்தக மற்றும் தொழில்நுட்ப துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். இது குறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம்.
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித் திறன்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். ஓராண்டில் 65 ஆயிரம் எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்கிறது. மேலும், அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதன்படி, ஓராண்டில் மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன.
What's Your Reaction?