WIPO 2024 Report: காப்புரிமைகள், வணிக முத்திரைகளில் டாப் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா!

காப்புரிமைகள், வணிக முத்திரைகள் மற்றும் தொழில்துறை வடிவமைப்புகளில் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளதாக உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் (WIPO) அறிக்கையை சுட்டிக்காட்டி வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Nov 12, 2024 - 19:40
 0  5
WIPO 2024 Report: காப்புரிமைகள், வணிக முத்திரைகளில் டாப் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா!

புதுடெல்லி: காப்புரிமைகள், வணிக முத்திரைகள் மற்றும் தொழில்துறை வடிவமைப்புகளில் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளதாக உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் (WIPO) அறிக்கையை சுட்டிக்காட்டி வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (WIPO) உலக அறிவுசார் சொத்து குறிகாட்டிகள் (WIPI) 2024-ஐ வெளியிட்டுள்ளது. இது அறிவுசார் சொத்து (IP) தாக்கல் செய்வதில் உலகளாவிய போக்குகளைப் பிரதிபலிக்கிறது. சிறந்த பொருளாதாரங்களில் காப்புரிமை, வணிக முத்திரை மற்றும் தொழில்துறை வடிவமைப்பு பயன்பாடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அறிக்கை வெளிப்படுத்துகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow