சீனாவில் கூட்டத்துக்குள் தாறுமாறாக காரை ஓட்டியதில் 35 பேர் பலி, 43 பேர் காயம்

சீனாவின் ஜுஹாய் நகரில் 62 வயது முதியவர் ஒருவர், மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில் 35 பேர் உயிரிழந்தனர்; 43 பேர் காயமடைந்தனர்.

Nov 12, 2024 - 20:40
 0  5
சீனாவில் கூட்டத்துக்குள் தாறுமாறாக காரை ஓட்டியதில் 35 பேர் பலி, 43 பேர் காயம்

பெய்ஜிங்: சீனாவின் ஜுஹாய் நகரில் 62 வயது முதியவர் ஒருவர், மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில் 35 பேர் உயிரிழந்தனர்; 43 பேர் காயமடைந்தனர்.

காரை ஓட்டிச் சென்ற முதியவர் ஃபான் என்று அடையாளம் காணப்பட்டது. விவாகரத்தான அவர் பெய்ஜிங் நகரில் இருந்து 2,200 கி.மீ தொலைவில் உள்ள ஜுஹாய் நகரத்தில் உள்ள ஒரு விளையாட்டு மையத்தில் திங்கள்கிழமை இரவு 7.48 மணிக்கு பொதுமக்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது காரை ஓட்டிச் சென்று மோதியுள்ளார் என்று அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow