இதய நோய் தீர்க்கும் பழங்காநத்தம் வீரபத்திரர்!
மாதுளம் பழமும், செம்பருத்தி பூவும் வைத்து மதுரை பழங்காநத்தத்திலுள்ள வீரபத்திரர் கோயிலில் வழிபட்டால் இதய நோய் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை

மாதுளம் பழமும், செம்பருத்தி பூவும் வைத்து மதுரை பழங்காநத்தத்திலுள்ள வீரபத்திரர் கோயிலில் வழிபட்டால் இதய நோய் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மதுரையை ஆட்சி செய்த மன்னர் மலையத்துவச பாண்டியனின் மனைவி காஞ்சனமாலைக்கு குழந்தை இல்லை. நீண்ட வேண்டுதலுக்குப் பின், இவர்களுக்கு அம்பிகையின் வடிவமாக மீனாட்சி அவதரித்தார். வீர தீரத்துடன் பல படைகளை வென்ற மீனாட்சி, கைலாயத்தில் சிவனை கண்டதும் தனது மனதுக்கேற்ற மணாளன் என உணர்ந்தார்.
மீனாட்சியை திருமணம் முடிக்க சிவபெருமான் கைலாயத்திலிருந்து மதுரைக்கு வந்தார். அனைத்து தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், மகரிஷிகள் அனைவரும் மதுரை வந்தனர்.
What's Your Reaction?