பொறியியல் படிப்புகள்: கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்! | புதியன விரும்பு 2.0 - 15
தற்போது கடைகளில் கிடைக்கும் ‘இன்ஸ்டன்ட்’ பழ ரசங்களும் சூப்களும் சமையல் பொருள்களும் உணவைப் பதப்படுத்துதல் குறித்த தொழில் நுட்பங்களைக் கற்றுத்தரும் ஃபுட் டெக்னாலஜி படிப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கியுள்ளன.

ஃபுட் டெக்னாலஜி: தற்போது கடைகளில் கிடைக்கும் ‘இன்ஸ்டன்ட்’ பழ ரசங்களும் சூப்களும் சமையல் பொருள்களும் உணவைப் பதப்படுத்துதல் குறித்த தொழில் நுட்பங்களைக் கற்றுத்தரும் ஃபுட் டெக்னாலஜி படிப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கி யுள்ளன. ஃபுட் டெக்னாலஜி படிப்பவர்களுக்கு உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள், உணவுப் பதனீட்டு நிறுவனங்கள், குளிர்பான தயாரிப்பு - குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள், மத்திய உணவு ஆராய்ச்சி நிறுவனங்கள், உணவுத் தரக்கட்டுப்பாட்டு மையங்கள் போன்றவற்றில் வேலை கிடைக்கும்.
உணவுப் பதனீட்டுத் தொழில்நுட்பப் படிப்புகளைக் கற்றுத்தருவதில் நாட்டிலேயே முக்கியத் துவம் வாய்ந்த கல்வி நிறுவனம், தஞ்சாவூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபுட் டெக்னாலஜி, ஆந்த்ரபிரனர்ஷிப் அண்டு மேனேஜ்மென்ட் (NIFTEM). மத்திய உணவுப் பதனீட்டு அமைச்சகத்தால் உருவாக்கப் பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் இது.
What's Your Reaction?