‘அவிஹிதம்’ படம் எப்படி? | வேடிக்கை அவர்களின் வாடிக்கை
இருளில் ஒரு காதல் ஜோடி சந்திப்பதைப் பார்த்துவிடுகிறார். இருளில் தெரியும் அந்த ஆண், மாவு மில் வைத்திருக்கும் வினோத் எனத் தெரிகிறது. அப்பெண் உருவம் யார் எனத் தெரியவில்லை. மறுநாள் முதல், அக்கேள்வி மண்டையைக் குடையத் தொடங்குகிறது.

ஒரு சமூகத்தின் ஆகப்பெரிய பொதுவான அம்சம், வேடிக்கை பார்த்தல். நெடுஞ்சாலை விபத்து , புல்டோசர் பள்ளம் வெட்டுவது தொடங்கி மழை வெள்ளம், கட்சி ஊர்வலம், பொதுவெளியில் பெண்கள் என எல்லாமே வேடிக்கையின் பகுதிகள். புறம் சொல்வதும், வதந்தி பரப்புவதும் இதன் நீட்சியே. அப்படி இன்னொருவரின் அந்தரங்கத்தை வேடிக்கை பார்த்ததில் விளையும் பிரச்சனையும் அதற்கான ஊர்மக்களின் எதிர்வினையும் தான், மலையாளத்தில் தற்போது வெளிவந்திருக்கும் "அவிஹிதம்".
இராவணேஸ்வரம் என்பது வட கேரளத்தில் ஒரு பின்தங்கிய குக்கிராமம். அங்கு வேலையற்றும், சிறிய வேலை பார்ப்பதும் என ஒரு சிறிய ஆண்கள் குழு இருக்கிறது. ஒரு முழு நிலவு இரவில், அக்குழு கூடி , குடித்து, வம்பு பேசி, பின் பிரிந்து செல்கிறது. அதில் ஒருவன் தனியே வீடு திரும்பும் வழியில், அசந்தர்ப்பமாக, இருளில் ஒரு காதல் ஜோடி சந்திப்பதைப் பார்த்துவிடுகிறார். இருளில் தெரியும் அந்த ஆண், மாவு மில் வைத்திருக்கும் வினோத் எனத் தெரிகிறது. அப்பெண் உருவம் யார் எனத் தெரியவில்லை. மறுநாள் முதல், அப்பெண் யார் என்னும் அக்குழுவினரின் மண்டை குடையும் கேள்விக்குச் சந்தேகத்திற்கு இடமான பெண்ணும் அவள் குடும்ப உறுப்பினர்களும் என்ன ஆகிறார்கள் ? இதை அந்தக் குடும்பமும், ஊர் மக்களும் அணுகும் முறை, ஆற்றும் எதிர்வினைகளை மெல்லிய நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் வெறும் 106 நிமிடத்தில், இத்திரைப்படம் சொல்கிறது.
What's Your Reaction?