எகிப்தில் இன்று காசா உச்சி மாநாடு - பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு: இஸ்ரேல் - காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி தலை​மை​யில் எகிப்​தில் இன்று நடை​பெற உள்ள காசா அமைதி உச்சி மாநாட்​டில் 20-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்​கின்​றனர்.

Oct 13, 2025 - 00:50
 0  3
எகிப்தில் இன்று காசா உச்சி மாநாடு - பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு: இஸ்ரேல் - காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

டெல் அவிவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி தலை​மை​யில் எகிப்​தில் இன்று நடை​பெற உள்ள காசா அமைதி உச்சி மாநாட்​டில் 20-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்​கின்​றனர். இதில் பங்​கேற்க வரு​மாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், பிரதமர் மோடி இந்த மாநாட்​டில் பங்​கேற்க மாட்​டார் என கூறப்​படு​கிறது. அதே​நேரம், இந்​தியா சார்​பில் மத்​திய வெளி​யுறவுத் துறை இணை அமைச்​சர் கீர்த்தி வர்​தன் சிங் பங்​கேற்​பார் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இஸ்​ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி நடை​பெற்ற ஓர் இசை நிகழ்ச்​சி​யில் ஹமாஸ் குழு​வினர் திடீரென புகுந்து தாக்​குதல் நடத்​தினர். இதில் 1,200 பேர் உயி​ரிழந்​தனர். 250 பேரை பிணைக் கைதி​களாக ஹமாஸ் குழு​வினர் பிடித்​துச் சென்​றனர். இதைத் தொடர்ந்​து, காசா மீது இஸ்​ரேல் ராணுவம் கடும் தாக்​குதல் நடத்​தி​யது. இந்த தாக்​குதல் 2 ஆண்​டு​களாக நீடித்​தது. இதில் பாலஸ்​தீன தரப்​பில் மொத்​தம் 67 ஆயிரம் பேர் உயி​ரிழந்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow