இருக்கன்குடி கோயில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா கோலாகலம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்க ன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது

Aug 8, 2025 - 17:55
 0  4
இருக்கன்குடி கோயில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா கோலாகலம்

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருவது வழக்கம். குறிப்பாக, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து அம்மனை தரிசித்து, அக்கினிச் சட்டி, ஆயிரம் கண் பானை ஏந்தியும், மா விளக்கு, பறக்கும் காவடி எடுத்தும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow