ஆடி மாத சப்தாகம் பூஜை: சோட்டானிக்கரை கோயில் காணிக்கையாகும் நிலக்கோட்டை மலர்கள்!
ஆடி மாத சப்தாகம் பூஜைக்காக கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்திற்கு நிலக்கோட்டையில் இருந்து நாள்தோ றும் தொடுக்கப்பட்ட மலர்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக அனுப்பி வருகிறார்

நிலக்கோட்டை: ஆடி மாத சப்தாகம் பூஜைக்காக கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்துக்கு நிலக்கோட்டையில் இருந்து நாள்தோறும் தொடுக்கப்பட்ட மலர்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக அனுப்பி வருகிறார்.
கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு கடந்த 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சப்தாகம் பூஜை எனும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்த விசேஷ நாட்களில் ஆலயத்தில் சரஸ்வதி, காளி, துர்க்கை மூன்று அவதாரங்களில் சோட்டானிக்கரை பகவதி அம்மன் காட்சியளிக்கிறார். அம்மன் ஆலயத்தை ஏழு நாட்களுக்கும் அலங்கரிக்க திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து சுகந்தா கரிகால பாண்டியன் என்ற பக்தர் நாள்தோறும் 500 கிலோ அளவிலான மலர்களை மாலையாக தொடுத்து கோயிலுக்கு நேத்திக்கடனாக அனுப்பி வைக்கின்றார்.
What's Your Reaction?