சபரிமலை துணை கோயில்களிலும் மண்டல கால வழிபாடுகள் மும்முரம்: களைகட்டும் மஞ்சள்மாதா ஆலயம்

ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜையைத் தொடர்ந்து மஞ்சள்மாதா உள்ளிட்ட சபரிமலையின் பல்வேறு துணை கோயில்களிலும் வழிபாடுகள் களைகட்டியுள்ளன.

Nov 19, 2024 - 16:35
 0  11
சபரிமலை துணை கோயில்களிலும் மண்டல கால வழிபாடுகள் மும்முரம்: களைகட்டும் மஞ்சள்மாதா ஆலயம்

தேனி: ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜையைத் தொடர்ந்து மஞ்சள்மாதா உள்ளிட்ட சபரிமலையின் பல்வேறு துணை கோயில்களிலும் வழிபாடுகள் களைகட்டியுள்ளன.

சபரிமலை சன்னிதானத்தில் மாளிகைப்புரத்தம்மன் எனும் துணை ஆலயம் அமைந்துள்ளது. ஐயப்பனை தரிசனம் செய்த பின்னர் இந்த ஆலயத்தில் உள்ள மஞ்சள்மாதாவை பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த அம்மன் பந்தளம் அரசு குடும்பத்தின் குல தெய்வம் ஆகும். ஐயப்பனுக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம் இந்த அம்மனுக்கும் அளிக்கப்படுகிறது. தனி மேல்சாந்தி மூலம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow