திருமலையில் 5 நாள் தெப்போற்சவம்: இன்று கோலாகல தொடக்கம்

திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது.

Mar 9, 2025 - 05:25
 0  3
திருமலையில் 5 நாள் தெப்போற்சவம்: இன்று கோலாகல தொடக்கம்

திருமலை: திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த தெப்பத்திருவிழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

திருமலையில் தெப்பத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் ஏகாதசியன்று தொடங்கப்பட்டு, பவுர்ணமியன்று நிறைவு பெறும். இவ்விழா இன்று தொடங்கப்பட உள்ளது. தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பத்தில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். இதற்காக மின் விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்களுடன் தெப்பம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow