இந்திய சந்தையில் நுழைந்தது ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் காயின்

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோ டிஜிட்டல் காயினை சமீபத்தில் அறிமுகம் செய்தது.

Mar 9, 2025 - 02:40
 0  3
இந்திய சந்தையில் நுழைந்தது ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் காயின்

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோ டிஜிட்டல் காயினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் நுழைந்துள்ள இந்த காயின், வணிக சமூகத்தினர் கிரிப்டோகரன்சி ஆர்வலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப் 3 மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டுவர, ரிலையன்ஸ் குழுமத்தின் தொழில்நுட்பப் பிரிவான ஜியோ பிளாட்பார்ம்ஸ் பாலிகன் லேப்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஜியோ காயின்கள் பிளாக்செயின் அடிப்படையிலான வெகுமதி டோக்கன்கள் ஆகும். பயனாளர்கள் இந்திய செல்போன் எண்ணைப் பயன்படுத்தி, வெவ்வெறு செல்போன் அல்லது இணையதள செயலி மூலம் ஜியோ காயினை வாங்கி பயனடையலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow