கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

மதுரை அழகர்​கோ​விலில் உள்ள கள்​ளழகர் கோயில் ஆடித் திரு​விழா​வின் 9-ம் நாளான நேற்று தேரோட்​டம் விமரிசை​யாக நடை​பெற்​றது. ‘கோ​விந்தா கோவிந்​தா’ கோஷம் முழங்க ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் இதில் பங்​கேற்​றனர்.

Aug 10, 2025 - 02:00
 0  4
கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

மதுரை: மதுரை அழகர்​கோ​விலில் உள்ள கள்​ளழகர் கோயில் ஆடித் திரு​விழா​வின் 9-ம் நாளான நேற்று தேரோட்​டம் விமரிசை​யாக நடை​பெற்​றது. ‘கோ​விந்தா கோவிந்​தா’ கோஷம் முழங்க ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் இதில் பங்​கேற்​றனர்.

கள்​ளழகர் கோயி​லில் ஆடித் திரு​விழா கடந்த 1-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தின​மும் காலை​யில் தங்​கச் சப்​பரத்​தி​லும், மாலை​யில் சிம்ம வாக​னம், அனு​மார் வாக​னம், கருட வாக​னம், சேஷ வாக​னம், யானை வாக​னம், குதிரை வாக​னம் உள்​ளிட்ட பல்​வேறு வாக​னங்​களி​லும் சுவாமி எழுந்​தருளி​னார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow