புத்திர தோஷம் போக்கும் குடவாசல் கோணேஸ்வரர் | ஞாயிறு தரிசனம்

பிரம்மா, வேதங்களை ஓர் அமுதக்குடத்தில் வைத்தபோது வெள்ளப் பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது.

Aug 24, 2025 - 07:50
 0  3
புத்திர தோஷம் போக்கும் குடவாசல் கோணேஸ்வரர் | ஞாயிறு தரிசனம்

மூலவர்: கோணேஸ்வரர் அம்பாள்: பெரியநாயகி தலவரலாறு: பிரம்மா, வேதங்களை ஓர் அமுதக்குடத்தில் வைத்தபோது வெள்ளப் பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. அப்போது சிவன், வேடன் வடிவில் சென்று குடத்தின் மீது அம்பு எய்தி, மீண்டும் உயிர்களைப் படைத்தார். அமுதக்குடத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். குடத்தின் வாய் பாகம் இப்பகுதியில் (குடவாசல் / குடவாயில்) விழுந்தது. காலவெள்ளத்தில் இந்த லிங்கம் புற்றால் மூடப்பட்டது.

பிற்காலத்தில் கருடனின் தாய் விநதை. சத்ரு என்பவளின் அடிமையாக இருந்தாள். தாயை மீட்க, கருடன் தேவலோகம் சென்று அமுதக்குடம் எடுத்து வந்தார். வழியில் இத்தலத்தில் இறங்கினார். அப்போது அசுரன் ஒருவன், கருடனிடம் இருந்து குடத்தை பறிக்க முயன்றான். கருடன் அக்குடத்தை இங்கிருந்த புற்றின் மீது வைத்துவிட்டு. போரிட்டார். அவனை வென்று குடத்தை எடுக்க வந்தபோது, குடம் புற்றுக்குள் புதைந்திருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow