ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ நவ.29-ல் ரிலீஸ்!

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Nov 11, 2024 - 16:14
 0  3
ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ நவ.29-ல் ரிலீஸ்!

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வானந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சொர்க்கவாசல்’. இயக்குநருடன் இணைந்து, எழுத்தாளர் தமிழ் பிரபா படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார். படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் ஆன்டர்சன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை செல்வா கவனிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow