தனுஷின் ‘இட்லி கடை’ படம் ஏப்.10-ல் ரிலீஸ்!

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Nov 11, 2024 - 16:15
 0  3
தனுஷின் ‘இட்லி கடை’ படம் ஏப்.10-ல் ரிலீஸ்!

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் இயக்கத்தில் அண்மையில் ‘ராயன்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து ‘இட்லி கடை’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கிரண் கெளசிக் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை தனுஷ் உடன் இணைந்து ஆகாஷ் பாஸ்கரனும் தயாரித்து வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow