தனுஷ் ஜோடியானார் கீர்த்தி சனோன்: படக்குழு அறிவிப்பு

ஆனந்த் எல்.ராய் இயக்கிய, ‘ராஞ்சனா’ படம் மூலம் இந்தியில் அறிமுகமான தனுஷ், அவர் இயக்கத்தில்  ‘அட்ரங்கி ரே’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

Jan 29, 2025 - 11:30
 0  6
தனுஷ் ஜோடியானார் கீர்த்தி சனோன்: படக்குழு அறிவிப்பு

ஆனந்த் எல்.ராய் இயக்கிய, ‘ராஞ்சனா’ படம் மூலம் இந்தியில் அறிமுகமான தனுஷ், அவர் இயக்கத்தில் ‘அட்ரங்கி ரே’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இப்போது அவர் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘தேரே இஸ்க் மே’ என்ற தலைப்பு வைத்துள்ளனர்.

இதன் அறிவிப்பு டீஸர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். கீர்த்தி சனோன் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டீஸர், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow