ஸ்விஸ் எனும் சொர்க்கம் 20: தூண் இல்லாத பாலம்!

அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதால் இந்தப் பாலத்துக்கு ஓர் அதிகப்படி அழகு கிடைக்கிறது. பாலத்தின் உள்பகுதியில் ஒரு கடை உள்ளது.

Nov 14, 2024 - 14:45
 0  15
ஸ்விஸ் எனும் சொர்க்கம் 20: தூண் இல்லாத பாலம்!

சுவிட்சர்லாந்தில் நாங்கள் தங்கியிருந்த நகரம் லொசான் (Lausanne) என்று குறிப்பிட்டிருந்தோம் இல்லையா? கிட்டத்தட்ட அதே பெயர் கொண்ட வேறோர் இடத்துக்குப் புறப்பட்டோம். லூசர்ன் (Lucerne) என்கிற பெயர் கொண்ட சுவிட்சர்லாந்து கான்டனின் அதே பெயர் கொண்ட தலைநகர் இது. இதன் மக்கள் தொகை ஒரு லட்சம்கூட இல்லை. (மக்கள் தொகையைப் பார்த்து இவ்வளவு குறைவா என்று வியப்பதும், பொருள்களின் விலையைப் பார்த்து இவ்வளவு அதிகமா என்று மலைப்பதும் ஸ்விஸ் பயணத்தில் அடிக்கடி நடக்கிறதுதான்.)

ரியஸ் (Reuss) நதியின் காரணமாக உருவான அற்புதமான லூஸர்ன் ஏரி இங்கு காணப்படுகிறது. ஏரியில் உலகப் புகழ்பெற்ற ஒரு மரப்பாலம் இருக்கிறது. இது லூஸர்ன் நகரைக் கிட்டத்தட்ட குறுக்குவாட்டில் பிரிக்கிறது. இது லூஸர்ன் நகரின் பழைய பகுதியையும் நவீனப் பகுதியையும் இணைக்கிறது. இந்தப் பாலத்தின் இப்போதைய நீளம் 205 மீட்டர். அருகில் உள்ள தூய பீட்டர் தேவாலயத்தின் ஜெர்மன் பெயரைத் தாங்கி ’கபெல்ப்ருக்’ என்று இந்தப் பாலம் அழைக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow