சுயசரிதை எழுத வைத்த சினிமா! | திரை நூலகம்

சேரன், பாலா தொடங்கி ‘கூழாங்கல்’,  ‘கொட்டுக்காளி’ படங்களின் வழியாக உலக சினிமா அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்து வரும் பி.எஸ்.வினோத்ராஜ் வரை அவர்களின் வெற்றிக்கதைகளை வாசித்தால் இதை உணர முடியும்.

Feb 7, 2025 - 19:35
 0  4
சுயசரிதை எழுத வைத்த சினிமா! | திரை நூலகம்

சினிமா குடும்பப் பின்புலம் ஏது மின்றி குக்கிராமங்களிலிருந்து வந்து திரையுலகில் அடையாளம் பெற்ற இயக்குநர்களின் வாழ்க்கை, திரைப்படத்தைவிட சுவாரசியம் மிகுந்தது. சேரன், பாலா தொடங்கி ‘கூழாங்கல்’, ‘கொட்டுக்காளி’ படங்களின் வழியாக உலக சினிமா அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்து வரும் பி.எஸ்.வினோத்ராஜ் வரை அவர்களின் வெற்றிக்கதைகளை வாசித்தால் இதை உணர முடியும்.

‘என்னுள் நீ எப்படி’ என்கிற இந்தச் சுயசரிதை நூலும் இந்த வரிசையில் இடம் பிடிக்கிறது. ‘எட்டு தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நாயகனாக நடித்துக் கடந்த அக்டோபரில் வெளியான படம் ‘ஆலன்’. எழுத்தாளன் ஆக விரும்பிய தியாகு (வெற்றி) என்கிற 14 வயது சிறுவன் வீட்டைவிட்டு காசி மாநகரத்துக்கு ஓடிப்போய் துறவு மேற்கொள்கிறான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow