ஸ்ரீரங்கம் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா கொடியேற்றம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை ஏப்.11-ம் தேதி நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா கொடியேற்றம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை ஏப்.11-ம் தேதி நடைபெறுகிறது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்றபோதும், ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டிற்கான பங்குனித் தேர் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
What's Your Reaction?