வைகாசி விசாகத் திருவிழா - திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Jun 9, 2025 - 12:25
 0  4
வைகாசி விசாகத் திருவிழா - திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர தினம், வைகாசி விசாக பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா இன்று (ஜூன் 9) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow