சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல​கால வழி​பாடு நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. புதிய மேல்​சாந்தி கோயில் நடையைத் திறந்​து​வைத்து வழி​பாடு​களை மேற்​கொண்​டார்.

Nov 18, 2025 - 09:25
 0  6
சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல​கால வழி​பாடு நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. புதிய மேல்​சாந்தி கோயில் நடையைத் திறந்​து​வைத்து வழி​பாடு​களை மேற்​கொண்​டார். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடை​பெற உள்​ளது. இதற்​காக நேற்று முன்​தினம் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்​கப்​பட்​டது.

தொடர்ந்​து, நேற்று அதி​காலை முதலே மண்​டல​கால வழி​பாடு​கள் தொடங்​கின. புதிய மேல்​சாந்​தி​களாக பொறுப்​பேற்ற பிர​சாத் நம்​பூ​திரி ஐயப்​பன் கோயில் நடையை​யும், மனு நம்​பூ​திரி மாளிகை புரத்​தம்​மன் கோயில் நடையை​யும் திறந்து வைத்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow