வீட்டு முறைப்படி இனிப்பு தயாரிப்பில் அசத்தும் மகளிர் குழு!

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு பலகாரங்கள் தான் நம் கண்முன்னே வந்து போகும். ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் புதுவித இனிப்பு, பலகாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

Nov 11, 2024 - 15:48
 0  4
வீட்டு முறைப்படி இனிப்பு தயாரிப்பில் அசத்தும் மகளிர் குழு!

கோவை: தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு பலகாரங்கள் தான் நம் கண்முன்னே வந்து போகும். ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் புதுவித இனிப்பு, பலகாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இனிப்பு பலகார வர்த்தகத்தில் பெரிய கடைகள் முதல் சாதாரண கடைகள் வரை பல கோடி வருவாயை ஈட்டித் தரும் தொழிலாக உள்ளது.

வீட்டுமுறை உணவுகளுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு இருப்பது போல, தீபாவளிக்கு வீட்டு முறைப்படி தயார் செய்யும் இனிப்பு, பலகாரங்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அந்தவகையில் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உணவகம் நடத்திவரும் ஸ்ரீகங்கை விநாயகர் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் தீபாவளி பண்டிகைக்கு லட்டு, மைசூர்பா, அதிரசம், ஜிலேபி, காஜு கத்திலி உட்பட 20 வகை இனிப்பு, பலகாரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow