வீட்டிலிருந்தபடியே சிகிச்சை நல்லதா? | மனதின் ஓசை 15

மனநலம் சார்ந்த இந்தச் சமூகக் களங்கம், பாதிக்கப்பட்ட வருக்குத் தயக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி அவர் சிகிச்சை பெறுவதற்கும் தடையாக இருக்கிறது.

Mar 19, 2025 - 12:15
 0  4
வீட்டிலிருந்தபடியே சிகிச்சை நல்லதா? | மனதின் ஓசை 15

மனநலப் பாதிப்புக்கான சிகிச்சை பெறுவதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது இயல்பான விஷயமாகப் பார்க்கப்படுவதில்லை. மனநலம் சார்ந்த இந்தச் சமூகக் களங்கம், பாதிக்கப்பட்ட வருக்குத் தயக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி அவர் சிகிச்சை பெறுவதற்கும் தடையாக இருக்கிறது.

உடைக்கப்பட வேண்டிய மனத்தடை: கரோனா பெருந்தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கிப் பெண்கள், பணியாளர்கள், முதியோர் எனப் பெரும்பாலானோருக்கு மனச்சோர்வு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இச்சூழலில் மனநலச் சிகிச்சைகள் அனைவருக்கும் கிடைப்ப தற்காக ‘Tele Psychiatry’ முறை உலக நாடுகளில் பரவலாக்கப்பட்டது. அதாவது, மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் மருத்துவரை நேரில் சந்திக்காமலேயே காணொளி மூலமாகவோ தொலைபேசி அழைப்பு வழியாகவோ தொடர்பு கொண்டு சிகிச்சை பெறும் சேவை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow